Breaking News

இதை தெரிஞ்சிக்கோங்க..! குருவி வீட்டில் கூடு கட்டினால் நல்லதா..? கெட்டதா..?

 


பொதுவாக பறவை வீட்டிற்குள் வந்தாலே வீட்டில் நேர்மறை ஆற்றலும் மகாலக்ஷ்மியின் அம்சமும், தெய்வீக அம்சமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல் பறவை வீட்டிற்குள் வந்து கூடு கட்டினால் அந்த வீட்டில் பலமடங்கு நேர்மறை ஆற்றலும் தெய்வீக சக்தியும் நிறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

முற்காலத்தில் வீட்டு வாசலில் நெற்கதிர்களை சொருகி வைத்திருப்பார்கள். இது போன்ற பறவை இனங்கள் அவற்றை உண்டு அங்கேயே தங்கி அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரவல்லது என்று அவர்கள் நம்பியிருந்ததே அதற்கு காரணம்.குருவி இனங்கள் சிறப்பு மிக்கவை. இவை பெரும்பாலும் நம்முடன் ஒன்றி இருக்கவே விரும்பும். இதற்கு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வரும் திறன் உள்ளது. இதன் ஜீவ சக்தியால் பல பிரச்சனைகளில் இருந்து நம் இல்லம் காக்கபட்டு சுபீக்ஷம் அடையும்.

ஒரு இடத்தில் குருவி கூடு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் தனது குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்குமா..? இந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறதா..? என்பதை ஆராய்ந்த பிறகு தான் கூடு காட்டவே தொடங்கும். அதாவது நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே குருவி கூடு கட்டும்.

எனவே, எந்த ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் தான் குருவி கூடு கட்டும். அதாவது அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்கும், தீயசக்திகள் இருக்காது, வீட்டில் சண்டைகள் இருக்காது மற்றும் செய்வினை இருக்காது. இந்த அனைத்தும் இல்லாத வீட்டில் தான் குருவி கூடு காட்டும்.

எனவே, வீட்டில் குருவி கூடு கட்டினால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நேர்மறை எண்ணத்துடன் தெய்வீக சக்தியுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்பதையே குறிக்கிறது.

உங்களுடைய வீட்டின் தென்திசையில் குருவி கூடு கட்டுவது பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்யும். ஆனால் தென்மேற்கு திசையில் குருவி கூடு கட்டுவது குடும்ப உறுப்பினர்களுடைய ஆயுளை அதிகரிக்கும். மேலும் நிதி நிலை உயருவதோடு தொழிலில் கணிசமான லாபமும் கிடைக்கும். வாஸ்துவின் படி, வீட்டில் குருவி கூடு கட்டுவது மங்களகரமானது. உங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை அழித்துவிடாதீர்கள். சிட்டுக்குருவிகளின் வருகை வீட்டிற்கு மகிழ்ச்சியும் செழிப்பும் கொண்டு வருகிறது.

மலேசியா போன்ற நாடுகளில், காடுகளில் வாழ்ந்து முடித்த பறவையின் கூட்டை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் விலையோ லட்ச கணக்கில்.. இதனை வாங்கி வீடுகளில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து விரைவில் விஷேச நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

நம்மூரில் ஒன்றை பின்பற்றினால் மூடத்தனம் எனும் சொல்பவர்கள், வெளிநாட்டில் அதே செயலை செய்யும் போது மறுப்பு தெரிவிக்காமல் நம்புகிறார்கள். அப்படியென்றால் நமது முன்னோர்கள் குருவி கூட்டை தொட்டு கும்பிட்டதும் கூட்டை கலைத்தால் பாவம் என சொன்னதெல்லாம் சரி தான் போல.

No comments