கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில்
கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக
கனமழை பெய்யும் என்றும் , திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,
திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி
மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம்
அறிவித்து இருந்தது.
அதேப்போன்று இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

No comments