Breaking News

School Morning Prayer Activities - 29.06.2024

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:406

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.

பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே

அல்லாமல், ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Pride comes before fall.

 அகம்பாவம் அழிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

" என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே! ---- நெப்போலியன் ஹில்

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?

விடை: கிரீன்லாந்து

2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா

English words & meanings :

 honesty-நேர்மையான,

 sincerity-நேர்மை

வேளாண்மையும் வாழ்வும் :

உற்பத்தி பெருக்கத்திற்காக உலக நாடுகள் செயற்கை வேளாண்மை செயல் படுத்த ஆரம்பித்தன. ஆனால் அது மண்ணையும் மக்களையும் மக்கள் உடல்நிலையும் பாதிக்க ஆரம்பித்தது.

நீதிக்கதை

 வேலை

சிற்பக்கூடத்திற்கு பார்வையாளர் ஒருவர் சென்றார் அங்கே இருந்த சிற்பி செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது அவர் சிற்பம் செதுக்கி கொண்டிருப்பதை  பார்த்துக் கொண்டிருந்த  பார்வையாளருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது

 அவர் அந்த சிற்பியிடம்,   "இந்த இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே! இரண்டு சிலைகள் செய்ய கூறினார்களா"?  என்றார்

 அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ," இல்லை இல்லை நான் முதலில் செய்த சிற்பத்தில் ஒரு குறை உள்ளது அதனால்  புதிய  சிலை செதுக்கி கொண்டிருக்கிறேன்" என்றார்.

 பார்வையாளரும்,"குறையா?  இவ்வளவு அழகான சிற்பத்தில் குறை உள்ளதா? எங்கே உள்ளது!  என்று கேட்டார்.

 அதுக்கு அந்த சிற்பி அவரிடம் ,"சிலையின் வலது காதுக்கு கீழே சிறிய  விரிசல் ஒன்று உள்ளது பாருங்கள்"என்றார்

அவர் அந்த சிற்பியிடம் "இந்த சிற்பத்தை எங்கே பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள்"? என்று கேட்டார்."கோபுரத்தின் மீது வைக்க உள்ளார்கள்"என்றார் சிற்பி.

அதற்கு அவர் " கோபுரத்தின் மீது வைக்கும் போது இந்த சிறிய விரிசல் எவர் கண்ணிலும் தெரியாது அல்லவா"? என்று கேட்டார்.

அதற்கு சிற்பி "நான் பிறருக்காக வேலை செய்யவில்லை  என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்"என்று  கூறினார்.

இன்றைய செய்திகள் - 29.06.2024

# ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர்-30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு.

# மயிலாடும்பாறையில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு.

# மாநகராட்சிகளாக தரம் உயரும் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை: பேரவையில் மசோதா தாக்கல்.

# இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோ நாய்கள்: சீன எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு.

# சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் வசம் ஒப்படைத்த நாசா.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் : அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே.

# டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.

Today's Headlines

# Court orders extension of e-pass procedure for Ooty, Kodaikanal till September-30th.

 # Discovery of the 13th Century stone Inscription at Mayiladumparai.


 # Tiruvannamalai, Namakkal, Karaikudi, Pudukottai are being upgraded to Municipal Corporations: Bill passed in Assembly.

#  Robot dogs will be used soon in the Indian Army: it is to tighten the security in Chinese border areas.

 # NASA entrusted SpaceX with the task of disposing  the International Space Station.

 # Eastbourne Tennis: American Taylor Pritz advances to semi-finals.

 # Copa America: Uruguay beat Bolivia and bagged the thrashing victory

 # T20 World Cup Final: India vs South Africa clashes today.



No comments