Breaking News

பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.! ஒரே செல்போன் நம்பரை பல வருடங்கள் பயன்படுத்தினால் தனி கட்டணம்..? வெளியான முக்கிய தகவல்.!!

 


ன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு என்பது பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அதற்கு ரீசார்ஜ் செய்யும் நிலையில் தற்போது ஒரு நம்பரை நீண்ட வருடங்கள் பயன்படுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது கடந்த வருடம் புதிய டெலிகாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் தனி கட்டணம் செலுத்தும் முறை பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி ஒருவர் இரு செல்போன் நம்பர்களை பயன்படுத்தும் போது ஒரு நம்பரை மட்டும்தான் அதிகமாக பயன்படுத்துவார். இப்படி 2 சிம் கார்டுகள் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக ஒரு நம்பரை மற்றவர்களுக்கு ஒதுக்காமல் இருப்பார்கள். இதனால் அவர்களிடம் அதற்காக தனி கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த முறை சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நகரங்களில் அமலில் இருக்கிறது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிப்பதா அல்லது ஒருமுறை மட்டும் கட்டணம் வசூலிப்பதா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

No comments