மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எல்லைப் பாதுகாப்பு படையில் ( BORDER SECURITY FORCE ) காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள், உதவி இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1526 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
இந்திய ராணுவத்தில் ஏதாவது பிரிவில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்களுக்காகவே தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப்பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது.
இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது. தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
பணி விவரம்
* Assitant Sub Inspector (Stenographer / Combatant Stenographer) Warrant Officer
* Head Constable
* BSF, CRPF,ITBP, CISF, SSB, AR உள்ளிட்ட பிரிவுகளுக்கு இந்த வேலைவாய்ப்பு மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://rectt.bsf.gov.in/#bsf-current-openings- என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு 7th CPC Pay Matrix Level-3, -ன்படி மாத ஊதியமாக ரூ.21,700- 92,300/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இப்பணியிடங்களுக்கு அனைத்து வகுப்பைச்சேர்ந்த பெண்கள், பட்டியலின்/ பழங்குடியின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் இணையவழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்களாகவும், 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆப்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும். பின்னர் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற வேண்டும். இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்
எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/234fb396-0d25-11ef-ba98-0a050616f7db.pdf?rel=2024060301 -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.7.2024 , 11.59 மணி வரை
No comments