ரூ. 1 கோடி பெற மாதம் எவ்வளவு தொகை சேமிக்க வேண்டும்? இதை மட்டும் பண்ணுங்க.. விஷயம் ரொம்ப சிம்பிள்!
1 கோடி நிதி இலக்கை அடைவது பல முதலீட்டாளர்களின் கனவு. இந்த இலக்கை அடைய தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
முதிர்வு காலம் மற்றும் முதலீடுகளின் வருவாய் விகிதத்தைப் பொறுத்து இந்த
ரூ. 1 கோடி இலக்கை எளிதில் அடையலாம். 10, 15 மற்றும் 20 ஆண்டுகளில் ரூ. 1
கோடி ரூபாய் குவிக்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் மற்றும் எங்கு முதலீடு
செய்ய வேண்டும் என்பதை இந்தக்கட்டுரை விவரிக்கிறது.
ரூ.1 கோடி
ரூபாயை 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளில் எப்படி குவிப்பது
என்பதைப் பார்ப்போம்.10 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது: 10 ஆண்டுகளில்
ரூ.1 கோடியை சேர்க்க, முதலீட்டாளர்கள் குறைந்த கால அவகாசத்தில், கணிசமான
தொகையை தவறாமல் சேமிக்க வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது
பங்குகளில் முதலீடு செய்யலாம். நீங்கள் மாதாந்திரம் சுமார் ரூ. 44,640
ரூபாய் தோராயமாக முதலீடு செய்து வந்தால், 12 சதவீத வருடாந்திர
வருமானத்துடன் ரூ.
1 கோடியை 10 ஆண்டுகளில் சேமிக்கலாம்.15 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேர்ப்பது: 15 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேமிக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய மாதாந்திர முதலீடு ரூ. 21,020 ரூபாயாகக் குறையும்.
மேலும் ஸ்டெப் அப் SIP-களில் முதலீடு செய்வதன் மூலம் கூட்டு வட்டியின் நன்மையால் அதிக வருமானத்தை பெற முடியும். ஆனால் இந்த முதலீட்டுக்கு உங்களுடைய ஆண்டு வருமானம் 12 சதவீதமாக இருக்க வேண்டும். இந்த கால்குலேஷன் அடிப்படையில் முதலீடு செய்து வந்தால் நீங்கள் 15 ஆண்டுகளில் ஒரு கோடி பெற முடியும்.20 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேர்ப்பது: 20 ஆண்டுகளில் முதலீடு செய்து ரூ.
1 கோடி திரட்ட வேண்டும் என்றால், மாதத்திற்கு தோராயமாக ரூ. 10,880 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்து ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வர ஆண்டுக்கு 12 சதவீத வருமானத்தில், இந்த இலக்கை எளிதில் அடைய முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து உங்களுடைய முதலீட்டு தொகை அமையும்.
முதலில் நாம் பார்த்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி திரட்டும் போது, அதில் தொகை சற்று அதிக அளவில் இருந்தது. ஆனால் 15 ஆண்டு என்று வரும்போது சிறிது குறைவாக இருந்தது. 20 ஆண்டுகள் எனும் பட்சத்தில் இன்னும் குறைவாக உள்ளது. இதிலிருந்து உங்களுடைய முதலீட்டின் அடிப்படையில் ரூ.
1 கோடி இலக்கு மாறும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, நிதி ஆலோசகர்கள் முதலீட்டின் முக்கியத்துவத்தையும், அதிக லாபம் ஈட்டுவதற்கு சரியான திட்டத்தை தேர்ந்தெடுப்பதை வலியுறுத்துகின்றனர். மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகரான ரோஹித் ஷா கூறுகையில், "ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு சுமார் 12% வருடா வருமானத்தை வழங்கி வருகின்றன, இது ரூ.1 கோடி போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.இருப்பினும், முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அடுத்து வரும் செலவுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முதலீடு செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:சீக்கிரம் தொடங்குங்கள்: நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய இலக்கை அடைய முடியும்.நிலையான முதலீடு: காலப்போக்கில் செல்வத்தை குவிப்பதற்கு வழக்கமான முதலீடு அவசியம்.சரியான முதலீட்டு திட்டங்கள்: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற சரியான முதலீட்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் நிதி இலக்குகளை அடைய தேவையான வருமானத்தை அளிக்கும்.இந்தக் கொள்கைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிடுவதன் மூலம், முதலீட்டாளர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த காலக்கெடுவில் ரூ.1 கோடியைக் குவிக்க முடியும். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முதலீட்டு கருத்துகளும் ஒரு கோடி எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

No comments