Breaking News

திருப்பதி செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு குட் நியூஸ்! 30 நிமிடங்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளது.

அது என்னவென்றால், திருப்பதி கோவிலுக்கு செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

திருமலை திருப்பதி கோவிலில் மூத்த குடிமக்களின் இலவச தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு 2 இடங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. திருப்பதி செல்லும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள், மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு இலவச தரிசனத்திற்கு தகுதியுடையவர்கள். அவர்கள், 30 நிமிடங்களுக்குள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

திருமலை திருப்பதி கோவியிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும். இதனால் மூத்த குடிமக்கள் அமைதியாகவும் தொந்தரவு இல்லாமலும் தரிசனம் செய்ய முடியும். மேலும், மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை செய்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு இலவச தரிசனம் மூலம் திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க, ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சிறப்பு இலவச தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் தட்சிண மட தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகே உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும். தரிசனத்தின் போது அவர்களுக்கு சாம்பார், தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், திருப்பதி கோவிலில் மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு இலவச தரிசனம் பற்றிய விவரங்களுக்கு 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

No comments