பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.25
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: மானம்
குறள் எண்:962.
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
பொருள்: புகழொடு
மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.
பழமொழி :
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
There is no words superior to one's father's advice.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
பொது அறிவு :
1. தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?
விடை : 5.
2. பின் பக்கமாகவும் நீந்தும் உயிரினம் எது?
விடை : இறால்
English words & meanings :
Meadow. - புல்வெளி
Mine. - சுரங்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீர் முக்கியமானது - அதற்கு மாற்றீடு எதுவும் இல்லை. எனவே நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று ஆகும்.
பிப்ரவரி 04 இன்று
வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்
வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.
உலகப் புற்றுநோய் நாள்
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
நீதிக்கதை
ஒற்றுமை
ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார்.
அவர்களை "ஒற்றுமையாக இருங்கள்" என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.
ஒரு நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே நால்வருக்கும் ஒற்றுமை பற்றிய பாடத்தினை புகட்ட அவர் நால்வருக்குள் ஒரு போட்டியை வைத்தார்.
நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்புகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். அவர்களும் கொண்டு வந்தனர். நான்கு கொம்புகளையும் கயிறு கொண்டு ஒன்றாக கட்டச் சொன்னார். பின்பு ஒவ்வொருவராக வந்து அந்த கட்டை உடைக்கச் சொன்னார் ஆனால் எவராலும் உடைக்க இயலவில்லை.
பின்னர் கட்டுக்களை அவிழ்த்து ஒவ்வொரு கொம்புகளாக எடுத்து உடைக்க சொன்னார்.விரைவில் சுலபமாக உடைத்து விட்டனர் அப்போது செல்வந்தர் "ஒற்¡றுமையின் பலம் என்ன என்று இப்போது புரிகிறதா"?என்று கேட்டார். மேலும்,"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் எவராலும் உங்களை அசைக்க முடியாது" என்றும் கூறினார்
இன்றைய செய்திகள் - 04.02.2025
* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.
* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.
Today's Headlines
* The High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.
* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.
* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.
* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.
* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.
Covai women ICT_போதிமரம்
No comments