Breaking News

தமிழக அரசின் குரூப் தேர்வு எழுதுபவர்களே ரெடியா இருங்க.. டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன குட் நியூஸ் :

 


தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்​கள் இடம்பெற்றுள்ளன. எத்தனை காலி​யிடங்கள் என்பது இடம்பெறாத நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வழியாக நிரப்பப்படுகிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

குரூப் தேர்வுகள் தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆவலோடு காத்து இருக்கிறார்கள். தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு ஏதுவாக தற்போது ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், குரூப்-1 தேர்வு, குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு என மொத்தம் 7 தேர்வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன. தேர்வர்கள் அதிகம் எழுதும் குரூப் தேர்வு 4 தேர்வு அறிவிப்பு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிடப்படும். வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் 2 தேர்வு ஜூலை 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும், செப்டம்பர் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடத்தப்படும். குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும், குரூப் 1 தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள் ஏமாற்றம் வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​கள் வழக்கமாக இடம் பெறும். ஆனால், 2025- ஆம் ஆண்டு தேர்வு அட்ட​வணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அது மட்டும் இன்றி முன்பு தனித்தனி தேர்வாக நடத்​தப்​பட்டு ​வந்த பல தேர்​வுகள் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப தேர்​வுகள் (இண்டர்வியூ), ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத்​தேர்​வுகள் (Non interview) என இரு பெரிய தேர்​வுகளாக சுருக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதில் எத்தனை காலிப்பணியிடங்கள் என்ற விவரம் இல்லை. தேர்வுகள் எப்போது? இந்த நிலையில்தான், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்கே பிரபாகர் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:- 2024-25 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2025- 26 நிதி ஆண்டுக்கான காலிப்பணியிட விவரங்கள் ஏப்ரல் மாதம் தான் தெரிய வரும். தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும் போது அதில் காலிப்பணியிடங்கள், எந்தெந்த பதவிகள் என்பது பற்றிய அறிவிப்பு இருக்கும்.
தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிட முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேர்வுகளின் முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன்படி வரும் வாரத்தில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்" என்று கூறினார்.


No comments