Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 


தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணாரப்பேட்டையில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 10, 2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்

தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக குரூப் 1 முதல் குரூப்4 வரை தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அரசு பணியில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் கிராம நிர்வாக அலவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. அந்த வகையில்  குரூப் 4 தேர்வின் அறிவிப்பு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி

அதனைத்தொடர்ந்து, ஜூலை 13ஆம் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதவுள்ள தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை, கிண்டி தொழில்சார் வேலைவவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலவலர்,

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும்,  விவரங்களுக்கு cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். வடசென்னையை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே  கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல அந்ந அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 

 

 

No comments