Breaking News

7வது ஊதியக்குழு: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? 56% அல்லது 57%? மார்சில் முக்கிய அறிவிப்பு:

 


7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மிகப்பெரிய புதுப்பிப்பு வெளிவந்துள்ளது. இது அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்த புதுப்பிப்பாகும். 

அரசு ஊழியர்கள் வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வைப் பெறுகிறார்கள். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாத டிஏ உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதமும், ஜூலை மாதத்துக்கான டிஏ உயர்வு அறிவிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதமும் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு அதிகரிக்கப்படும். ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் 53 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். ஓய்வூதியதாரர்கள் 53% அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) பெற்று வருகிறார்கள். ஜூன் மாதம் அகவிலைப்படி 3% அதிகரித்ததையடுத்து 50% ஆக இருந்த டிஏ 53% ஆக அதிகரித்தது.

ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்? அகவிலைப்படி 56% ஆக உயருமா அல்லது 57% ஆக அதிகரிக்குமா? அதாவது டிஏ 3% உயருமா அல்லது 4% உயருமா? இதை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையில், அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஜூலை முதல் நவம்பர் 2024 வரையிலான AICPI தரவுகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் டிசம்பர் மாத தரவு வரவேண்டியுள்ளது. அதன் பின்னர் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும். எனினும், தற்போது வரை வந்துள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த முறையும் அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், டிசம்பர் மாத தரவுகள் வந்தவுடன் அகவிலைப்படி 4% அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு சாரார் கூறுகிறார்கள்.

எனினும் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. இந்த முறையும் அகவிலைப்படி மூன்று சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் ஜனவரி 2025 முதல் அகவிலைப்படி 56% ஆக உயரும் என்ற கணிப்பே அதிகமாக உள்ளது. இந்த உயர்வு ஊழியர்களின் ஊதிய உயர்வு (Salary Hike) மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கு (Pension Hike) வழிவகுக்கும். அகவிலைப்படி 56% ஆக உயர்ந்தால், அது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும். சம்பள உயர்வு அவர்களின் மாதாந்திர வருவாயை சாதகமாக வழியில் அதிகரிக்கும். 

No comments