Breaking News

BSNL, Airtel, Vi சிம் இருக்கா? ரீசார்ஜ் செய்யாமலே வாய்ஸ் கால்ஸ் பேசலாம்.. எப்படி? Mobile-ல இதை ON பண்ணுங்க..

 


பிஎஸ்என்எல் (BSNL), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் விஐ (Vi) சிம் கார்டு (SIM card) உங்களிடம் இருக்கிறதா? அப்படியானால், ரீசார்ஜ்ஜே செய்யாமல் தொடர்ந்து வாய்ஸ் கால்ஸ் சேவையை (voice call without recharge) மட்டும் பயன்படுத்த ஒரு தந்திரமான டிப்ஸ் இருக்கிறது. இந்த டிப்ஸை பின்பற்றுவதன் மூலம், உங்கள் மொபைல் நம்பரை அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட காலத்தில் வாய்ஸ் கால்ஸ் சேவையை பயன்படுத்த முடியும். இதை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இந்திய டெலிகாம் துறையின் (Indian telecom companies) கீழ் இயங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (private telecom companies) ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்தவையாக மாறிவிட்டன. இதனால், மக்கள் மீண்டும்-மீண்டும் அவர்களுடைய விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி ரீசார்ஜ் செய்து சலிப்புத்தட்டி போய்விட்டனர் என்பதே உண்மை. உங்கள் சலிப்பை சந்தோஷமாக மாற்றக்கூடிய ஒரு தந்திரத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

BSNL, Airtel, Vi சிம் இருக்கா? ரீசார்ஜ் செய்யாமலே வாய்ஸ் கால்ஸ் பேசலாம்.. எப்படி? உங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ்ஜே (mobile number recharge) செய்யாமல் தொடர்ந்து வாய்ஸ் கால்ஸ் சேவையை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கும் இந்த தந்திரத்தை (how to use voice call feature without recharging SIM card) இப்போது இந்தியாவில் சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் வாய்ஸ் கால்ஸ் சேவையை பயன்படுத்த உங்கள் போனில் வைஃபை காலிங் (WiFi calling) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

இந்த தந்திரத்தை பயன்படுத்த உங்களிடம் ஒரு அடிப்படை பிராட்பேண்ட் திட்டம் (broadband plan) அல்லது வைஃபை இணைப்பு (WiFi connection) மட்டும் இருந்தால் போதும். உங்கள் மொபைல் செட்டிங்ஸ்கில் வைஃபை காலிங் சேவையை ஆக்டிவேட் (how to activate WiFi calling in your smartphone) செய்திருந்தால் மட்டும் போதும், எந்த கட்டணமும் இல்லாமல் வைஃபை இணைப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் நீங்கள் இலவசமாக வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்த முடியும்.
உடனே உங்கள் போனில் WiFi காலிங் அம்சத்தை ஆக்டிவேட் செய்யுங்க: வெளியில் செல்லும் பொழுது இணைப்பில் இருக்க அனுமதிக்கும் விலை குறைந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் அதிக செலவு செய்து, விலையுயர்ந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. சரி, இப்போது உங்கள் போனின் எப்படி WiFi காலிங் அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம் என்று பார்க்கலாம். தற்போது சந்தையில் விற்பனையாகும் பல ஸ்மார்ட்போன்களில் WIFI கால்லிங் அம்சம் பயன்படுத்த கிடைக்கிறது. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எப்படி WiFi Calling சேவையை ஆக்டிவேட் செய்வது? - உங்கள் ஸ்மார்ட்போனில் Settings ஓபன் செய்யவும். - Network & Internet settings என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். - SIM Card & Mobile Network என்பதை கிளிக் செய்யவும். - நீங்கள் அழைப்பு அம்சத்தை பயன்படுத்த விரும்பும் SIM கார்டை தேர்வு செய்யவும். - இப்போது காண்பிக்கப்படும் விருப்பங்களை ஸ்க்ரோல் செய்து WiFi Calling கிளிக் செய்யவும். - இப்போது உங்கள் போனில் WiFi Calling சேவை ஆக்டிவேட் செய்யப்படும்.

இனி உங்கள் போன் தானாக வைஃபை இணைப்பு வாய்ஸ் காலிங் சேவையை (WiFi connected voice calling) தேவைப்படும் நேரங்களில் தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் WiFi விருப்பம் எப்போதும் ஏதேனும் ஒரு வைபை இணைப்புடன் இணைந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறையை பின்பற்றி நீங்கள் விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதை குறைக்கலாம்






No comments