CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . செல்வ.ரஞ்சித் குமார்_
CPS ₹50,000/-ஐ 80CCD(1B)ல் கழிக்கக் கூடாது. . . கழிக்கக் கூடாது. . . . கழிக்கவே கூடாது!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
2017 முதல் கடந்த காலங்களில் வருமான வரித்துறையில் இருந்து பெறப்பட்ட விளக்கக் கடிதங்களில் CPS தொகையை கழிக்கலாம் என்றால் அது Tire-I முதலீடாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முக்கியக் குறிப்பும் சேர்த்தே தான் இடம்பெற்றிருக்கும் என்பதைத் தற்போதும் 50,000 கழிப்போம் என்று கூறும் CPS பாதிப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவும்.
IT துறை தொழிற்நுட்ப ரீதியாக உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் NPSல் சேராத - Tire-Iல் முதலீடு செய்யப்படாத CPS தொகையை விதியை மீறிக் கழிப்போம் என்பது தேவையற்ற சிக்கல்களை CPS பாதிப்பாளருக்கும், அதனை ஏற்கும் ஊதியம் வழங்கும் அலுவலருக்கும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
அனைத்திற்கும் மேலாக, இம்முறை நமது வரியை நிர்ணயம் செய்வதே IFHRMS தான் என்பதால், 80CCD(1B)ஐ நமக்கு வழங்கலாமா கூடாதா என்பதையும் IFHRMS தான் முடிவு செய்யும்.
நானறிந்தவரை IFHRMS 80CCD(1B)ஐ பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
No comments