School Morning Prayer Activities - 05.02.2025
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: மானம்
குறள் எண்:963
பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
பொருள்: செல்வம் பெருகும் போது அடக்கம் வேண்டும். செய்வம் குறையும் போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.
பழமொழி :
தருமமே தலை காக்கும்.
Charity guards the head.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.---மாவீரன் நெப்போலியன்
பொது அறிவு :
1. நிலவில் விளையாடிய முதல் விளையாட்டு எது?
விடை : கோல்ப்.
2. அடிடாஸ் எந்த நாட்டின் நிறுவனம்?
விடை : ஜெர்மனி
English words & meanings :
Mud. - சேறு
Ocean. - பெருங்கடல்/சமுத்திரம்
வேளாண்மையும் வாழ்வும் :
நீர் வளத்திற்கான தேவை மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது.
பிப்ரவரி 05 இன்று
கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.
நீதிக்கதை
ஆணவம் அழிந்தது
போரில் வெற்றி பெற்ற மன்னர் ஆணவம் கொண்டார் . தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால் மன்னரின் ஆணவம் அதிகரித்தது.
அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?" எனக் கூறி சிரித்தார்.
துறவி சற்றும் கலங்கவில்லை.
மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.
தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார்.
மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார்.
அதற்கு துறவி,"மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர் இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.அதைப்போல தாங்களும் சிந்தித்தால் தமக்கே புரியும் "என்று கூறினார்.
மேலும், துறவி,"இந்த உலகில் தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தை கைவிட்டார்.
இன்றைய செய்திகள் - 05.02.2025
* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.
* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.
* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.
* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.
Today's Headlines
* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.
* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.
* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu
* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.
* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.
* Chennai Open Tennis: Italian player won in the first round.
Covai women ICT_போதிமரம்
No comments