Breaking News

12.75 லட்சம் இல்ல.. 13.7 லட்சம் வரை 'ஜீரோ' வருமான வரி.. அட இப்படியொரு விஷயம் இருக்கா..!!

 


மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய வருமான வரி முறையின் கீழ் 12.00 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் கீழ் ஜீரோ வருமான வரி என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் 1 கோடி பேர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை என நிதியமைச்சர் புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளைார்.

12.00 லட்சம் வரை வருமான வரி இல்லை என அறிவித்தாலும் அதை தாண்டி பல சலுகைகள் புதிய வருமான வரி முறையின் கீழ் உள்ளது, இதன் மூலம் மாதசம்பளக்காரர்கள் 13.7 லட்சம் ரூபாய் வரையில் வருடாந்திர சம்பளம் பெறுவோர் இனி ஒரு ரூபாய் கூட வருமான வரியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது எப்படி..?
மாதம் சம்பளக்காரர்கள் தங்கள் வருமான வரி சுமையைக் கணிசமாகக் குறைக்க NPS (தேசிய ஓய்வூதிய திட்டம்) என்ற ஒரு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதிய வருமான வரி முறையின் கீழ், மாத சம்பளதாரர்கள் ஆண்டுக்கு ரூ.13.7 லட்சம் வரை வரி செலுத்தாமல் இருக்க முடியும். இது மாத சம்பளம் வாங்காத தனிநபர்களுக்கு (Non Salaried) கிடைக்கும் ரூ.12 லட்சத்துடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான லாபமாக கருதப்படுகிறது. இந்த கூடுதல் வரி விலக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் மூலம் கிடைக்கிறது: ரூ.75,000 நிலையான வருமான வரி விலக்கு (standard deduction) மற்றும் NPS-ல் முதலீடு ஆகியவற்றின் மூலம் கிடைக்கிறது. 12 லட்சத்தை தாண்டி standard deduction மூலம் 75000 ரூபாய் வரையிலான வரி விலக்கை மட்டுமே அனைவரும் பேசி வருகின்றனர். ஆனால் NPS முதலீடு மூலம் கிடைக்கும் சலுகையை பலரும் மறந்துவிட்டனர்.
வருமான வரி பிரிவு 80CCD(2) இன் கீழ் NPS-ல் செய்யப்படும் முதலீடுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவரின் அடிப்படை சம்பளத்தில் சுமார் 14% வரையிலான தொகைக்கு புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இது பழைய வரி முறையின் கீழ் வழங்கப்படும் 10% விலக்கை விட 4 சதவீதம் அதிகம் என்பதும் பலகுக்கு தெரியாது.

உதாரணமாக, ஆண்டு வருமானம் ரூ.13.7 லட்சம் கொண்ட ஒரு நபர் 50 சதவீத தொகையை அடிப்படை சம்பளமாக பெறுகிறார் என வைத்துக்கொள்வோம், இந்த ரூ.6.85 லட்சத்தில் 14% தொகை ரூ.95,900 இதை NPS-ல் முதலீடு செய்தால், இந்த முழு வருமானத்திற்கும் வரி விலக்கு கிடைக்கிறது. இருப்பினும், இந்த NPS சேவை நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட வேண்டும், நீங்களாக தனியாக முதலீடு செய்தால் இதில் ஏற்றுக்கொள்ளபடாது, இதனால் பலரும் NPS மூலம் கிடைக்கும் சலுகையை பேசுவது கிடையாது. எனவே உங்கள் நிறுவனத்தில் NPS சேவை இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு இதை கணக்கிடவும். இந்த சலுகை கட்டமைப்பில் ஒரு நபர் ரூ.13.7 லட்சம் வருடாந்திர வருமானத்துடன் அடிப்படை சம்பளம் ரூ.6.85 லட்சம் (மொத்த சம்பளத்தில் 50%) பெறுவதாக வைத்துக் கொள்வோம். அவரது அடிப்படை சம்பளத்தில் 14% ஆகிய ரூ.95,900-ஐ NPS-ல் முதலீடு செய்வதுடன், ரூ.75,000 நிலையான வருமான வரி கழிப்பு ஆகியவற்றின் மூலம் அவரது முழு வருமானமும் வரி விலக்கு பெறுவார்கள்.
இந்த கட்டமைப்பில் அதிகப்படியான வரி நன்மைகள் இருந்தபோதிலும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே NPS நன்மையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த NPS திட்டத்தில் 22 லட்சம் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். மக்களின் இந்த குறைவான பங்கீடு இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன: NPS பங்களிப்புகளுக்கு நீண்ட கால லாக் இன் காலம் உள்ளது, இதேபோல் முதிர்வு தொகையை திரும்பப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் உள்ளது. மற்ற முதலீடுகளில் இதுப்போல் இல்லை.




 

 



No comments