Breaking News

ரூ.5 ஆயிரம் SIP முதலீடு.. ரூ.10 கோடி ரிட்டன்.. பவர் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!

 


கடந்த காலங்களில், நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் 22.95 சதவீதமும், ஃப்ராங்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்ட் 20.59 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட் 22.40 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 21.11 சதவீதமும், ஃப்ராங்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 19.95 சதவீதமும் ரிட்டன் கொடுத்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. கடந்த கால முதலீட்டாளர்கள் குறைவான ரிஸ்க் கொண்ட ஃபண்டுகளை எதிர்பார்த்த நிலையில், தற்போது கான்ட்ரா பண்டு என்றாலும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது தொடர்கிறது. மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக அளவிலான வருவாயை கொடுக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

அதே நேரத்தில் இதில் ரிஸ்க்கும் அந்த அளவிற்கு அதிகமாக உள்ளது. இதனை முதலீட்டாளர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்து காணப்படுகிறது என்பதை பொருளாதார நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
குறிப்பாக அனைத்து வயதினரும் இதில் முதலீடு செய்வதாகவும் முதலீட்டு கண்காணிப்பு மற்றும் ஆலோசனை நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது வயது வித்தியாசம் இன்றி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடுகள் தொடர்வதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஐந்து வகையான திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களின் கடந்த கால வருவாய், எஸ் ஐ பி பங்களிப்பு மற்றும் ரிட்டன் குறித்து இதில் பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எஸ்.ஐ.பி வளர்ச்சி விகிதம் (%)
நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் 22.95
ஃப்ராங்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்ட் 20.59
ஹெச்.டி.எஃப்.சி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட் 22.40
ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 21.11
ஃப்ராங்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 19.95

ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு

இதில், ஃப்ராங்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தில் ரூ.500 முதல் எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் செலவின விகிதம் 1.70 சதவீதம் ஆக உள்ளது.
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு 30 ஆண்டுகளில் ரூ.7,75,34,116 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தில், மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.9,83,59,305 ஆக உயர்ந்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்ட்டில் மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு 29 ஆண்டுகளில் ரூ.10,47,89,185 ஆக உயர்ந்துள்ளது.

ஃப்ராங்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்ட் திட்டத்தில், ரூ.5 ஆயிரம் முதலீடு 31 ஆண்டுகளில் ரூ.10,68,36,776 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மறுபுறம், நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் திட்டத்தில் மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு 29 ஆண்டுகளில் ரூ.11,69,93,500 ஆக உயர்ந்துள்ளது.

No comments