Breaking News

School Leave: "53 பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு“ - எந்தெந்த பள்ளிகளுக்கு தெரியுமா..?

 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பரபரப்பான அரசியல் சூழல், வாக்குப்பதிவுக்கான இறுதி கட்ட தயாரிப்புகள் முடிவடையும்ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு பிறகு பிப்ரவரி 5 இன்று  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி நேரடியாக மோதுகின்றன. அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் புதிய கட்சிகள் பெரும்பாலும் போட்டியில் இருந்து விலகியதால், திமுக-நாம்தமிழர் கட்சி இடையே முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கவனிக்கப்பட்டுவரும் இந்த தேர்தல், முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளின் கீழ் உள்ள 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்டவை. 53 வாக்கு மையங்களில் மொத்தம் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலுக்காக, வாக்குச்சாவடி மையங்களாகக செயல்படும் 53 பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 & 5ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடி அமைக்கப்படாத பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 அன்று நடைபெறவுள்ளது, மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 அன்று நடைபெறும். தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை ஆற்றிட பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

No comments