தமிழகத்தில் வரும் 14 முதல் கோடை விடுமுறை:
தமிழக பள்ளி கல்வி திட்ட மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு நாளை நிறைவடைகிறது. நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை விடப்படுகிறது.தமிழக பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பள்ளிகள் தாமதமாக நவம்பரில் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் படி பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனாவால் விடுமுறை விடப்பட்ட வேலை நாட்களை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு மே மாதம் வரை பள்ளி வேலை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன.
இதனால், வழக்கமான ஏப்., 12ல் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிப்பதற்கு பதில், ஒரு மாதம் தாமதமாக ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.இதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதி தேர்வுகள் துவங்கின; தேர்வுகள் நாளை முடிகின்றன.நாளை மறுநாள், அதாவது 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது.
கோடை விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
No comments