Breaking News

வாட்ஸ் அப் பயனர்களுக்கு வந்துவிட்டது அசத்தல் அப்டேட்..!!

 

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்து வருகிறது வாட்ஸ் அப். அந்த வகையில் எமோஜி ரியாக்‌ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. இது Android 2.22.8.3.பீட்டா வெர்ஷனில் அறிமுகம் ஆனது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ளது.

உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தாலே இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கும். ஒருவேளை அப்டேட் செய்தும் கிடைக்காதவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

சேட் செய்யும் போது குறிப்பிட்ட மெசேஜை அழுத்திப்பிடித்தால் குறிப்பிட்ட எமோஜிகள் கிடைக்கும். அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது.

No comments