தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா..?
தமிழகத்தில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி,
கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,
விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (15-ம் தேதி)
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம்,
தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருவாரூர், நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்ட
பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல நாளை மறுநாள் (16-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்
பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்,
திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர்,
பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 17, 18-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை
மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும்
குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்றும் நாளையும் கேரளா, லட்சத் தீவு, குமரிக்கடல் பகுதி, மன்னார்
வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்
பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்
வீசக்கூடும். மே 17-ம் தேதி குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை
கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த
காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்
மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments