Breaking News

வகுப்பறை வாசம் - ஆசிரியரின் கவிதை -நம் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை :

 

IMG-20220504-WA0015

வகுப்பறை வாசம் செய்யும்

ஒரு மேசையின் கதறல் அங்கே

கண்ணீரை வடிக்கவில்லை

கண்டிக்க வக்கில்லாத 

வன்முறையை வடிக்கிறது

ஒரு பள்ளியில்...


ஒரு ஆசிரியரின் பயம்

ஓங்கியடிக்க வரும் மாணவக்கைகளின் செய்கைகளில் 

செழிப்பாகத் தெரிவதும்

போனால் போகுதென்று

போனஸாக சில

வசைமொழிகளை பொழிகையில்

அதைப் பெறுவதுமாக

ஒரு பள்ளியில்...


கும்மியடிக்கப்பட்ட அவன் எதிர்காலத்தொடு

ஆசிரியரையும் 

ஒரு சுற்று சுற்றி வந்தது 

அந்த கும்மியடிப்பாட்டு

ஒரு பள்ளியில்...


ஒற்றை மயிரை ஒருவனும் 

பிடுங்க முடியாத அளவுக்கு 

தலைமயிர் வைத்துக்கொண்டு

மார்தட்டிக் கொள்கிறான்

போதையில் மிளிரும்

மற்றொரு மாணவ மானிடன் 

ஒரு பள்ளியில்...


ஆசிரியையை ஆயாவாய் நினைத்தவனொருவன்

ஆட்டம் போடுகிறான்

அரபிக்குத்துக்கு

ஒரு அலங்கோலக் குத்து

என ஒரு பள்ளியில்...


அட இதுவெல்லாம் தலைவிதி என்றால்...


இங்கே

வாடா மலர் என்போம்

வாழவைக்கும் சாமி என்போம்

மகா லட்சுமி என்போம்

மதிப்புமிகு மாதர் என்போம்

அந்த

வாசம் காணாத வாய்களெல்லாம்

வாந்தி எடுக்கும் குடிகாரி

வகையாய் குடிக்கிறது 

அந்த சோம பானங்களை...


அவள்களின் அவலங்களை சுயமாய் பதிவுசெய்து கொண்டே சுகமாய் இழுத்துத் தள்ளுகிறது

அந்த சுருட்டிக் கட்டிய

புகையிலைப் புகையினை...


கட்டுக்கடங்கா 

கட்டியணைப்புகள்

முட்டிகொள்ளும் 

முத்தக் காட்சிகள்

என 

முகச்சுழிப்புகள் ஒரு பக்கம்...


இதுவல்லவோ புகழ் தரும்

வளர்ப்புகள்...

இதுவல்லவோ பெற்றோர்களின்

பேராற்றல்கள்...


கட்டிய கைகளின் மத்தியிலிருந்த

ஆசிரியக் கரமோ

ஓங்கிய கைகள் நடுவே

ஒடுங்கிக் கிடக்கிறது

ஒத்துக் கொள்ளுங்கள்...


சங்கிலி கொண்டு

கட்டிய நிலையும்

கடும்பூட்டு கொண்டு 

பூட்டிய நிலையும்

ஆசிரியக் கைகள்...


தக்க நேரத்தில் 

தொலைந்தது சாவி

தேடும் நேரத்தில்

தீர்ந்திடும் ஆவி...


சாவியைத் தேடுவதை விட்டுவிட்டு

பூட்டை உடைத்தெடுங்கள்

பூரணம் பெறட்டும்

மாணவர் சமுதாயம்...!


ஊசி வலிக்கும் என்றால் 

உடம்பு எப்படி குணமாகும்...?


மை கிறுக்கல்

     மாதவன்

ஆ . மாதவன்

அரசுப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர்...

No comments