சுகர் பிரச்னை: முருங்கை இலை இருக்கா? காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிடுங்க!
முருங்கை மரம் இந்தியாவில் ஏராளமாக வளர்க்கப்படுகிற மரங்களில் ஒன்று. அதிலும் தமிழகத்தில் இவை அதிகமாகவே காணப்படுகிறது. அவ்வகையில் நம்முடைய ஊர்களிலோ அல்லது தெருவிலோ கண்டிப்பாக ஒரு முருங்கை மரமாவது நிச்சயம் இருக்கும். இந்த முருங்கை மரத்தில் ஏராளமான நற்பயன்கள் உள்ளன. அதோடு நமது உடலுக்கு தேவையான இரும்புச் சத்து சற்று அதிகமாக காணப்படுகிறது. மற்றும் அதன் இலை மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளது.
தற்போது முருங்கை இலையின் பொடி ஆன்லைன் மற்றும் மளிகை கடைகளில் எளிதாக கிடைக்கிறது. இவை குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக உள்ளது. இதன் பொடியையோ அல்லது வெயிலில் உலர்த்தி அரைக்கப்பட்ட முருங்கை தூளையோ தினமும் காலையில், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தூளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து டீ-யாக அருந்தி பல ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம்.
பண்டைய காலங்களில் முருங்கை இலையின் தூள், தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில், இவை பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டதாக உள்ளது.
பல ஆண்டுகளாக இது ஒரு பிரபலமான சூப்பர்ஃபுட் என்ற பட்டமும் பெற்றுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு தேயிலை அல்லது காபியோடு இதை சேர்த்து உட்கொள்வதன் மூலமும், உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் எடை இழப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கப் பயன்படுகிறது.
தினமும் வெறும் வயிற்றில் முருங்கை இலை நீர் அல்லது தேநீர் அருந்துவது உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதற்கு உங்களை ஊக்குவிக்கும் சில காரணங்களை இங்கு நாம் பார்க்கலாம்.
சிந்தியா ட்ரெய்னர் எழுதிய கொழுப்பை எப்படி இழப்பது என்ற புத்தகத்தின் படி, முருங்கை இலையின் தேநீர் எடை இழப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதன் நுகர்வு கொழுப்பு சேமிப்புக்கு பதிலாக ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தியானவை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக எளிதாகக் காணலாம்.
முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன. இவை இரத்த அழுத்தம் உயர உதவும் தடிமனான தமனிகள் இருப்பதைத் தடுக்க உதவுகின்றன.
முருங்கை இலையில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
முருங்கை இலையில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
முருங்கை இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம், உங்கள் தோல் மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்த உதவக்கூடும்.
No comments