மாணவர்களே பொழைச்சு போங்க.. பொது மன்னிப்பு வழங்கியது அரசு..!
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக, அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் சிலரின்
அட்டகாசங்கள் பெற்றோரையும், கல்வியாளர்களையும் கடும் அதிர்ச்சி அடையச்
செய்துள்ளது.
இந்த பிரச்னை எல்லை மீறிச் சென்றதால், ‘ரகளையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவர்’ என்றும், ‘அவர்களின் மாற்றுச் சான்றிதழில் ‘மோசமான நடத்தை' எனக் குறிப்பிடப்படும்’ என்றும் அரசு அறிவித்தது.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கை மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து, அவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் ஆபத்து உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தற்போது ரகளையில் ஈடுபட்டு சிக்கியுள்ள மாணவ - மாணவியருக்கு பொது மன்னிப்பு வழங்கவும், மாற்றுச் சான்றிதழில் நடத்தையை குறிப்பிட வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments