Breaking News

வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்திய எஸ்பிஐ… ஈஎம்ஐ அதிகரிக்க வாய்ப்பு!!

எஸ்பிஐ வங்கி கடந்த 30 நாட்களில் 2ஆவது முறையாக, வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது.

எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் எஸ்பிஐ கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால், 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்ததைத் தொடர்ந்து 7.20% ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் மூன்று மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 10 பி.பி.எஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்.சி.எல்.ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான .எம். அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments