அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு..?: வெளியானது தகவல்..!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான அரசு கடந்த 2020-ம் ஆண்டு, அரசு ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக அதிகரித்தது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து
எதிர்ப்புகள் கிளம்பியது.இருப்பினும், அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த
அறிவிப்பானது நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இத்தகைய முடிவை அரசு எடுத்ததாக
கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது திமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டில்
60 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஓய்வு பெற்றால் அரசுக்கு சுமார் 18,000 கோடி
நிதி தேவைப்படுகிறது. அத்துடன், இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
உள்ளதால் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்க 300 கோடி ரூபாய்
தேவைப்படுகிறது.
அடுத்துள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய புதியவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க 600 கோடி செலவு ஆகும்.
ஆகவே, 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்போது ஓய்வு பெற்றால் அரசுக்கு
வருடத்திற்கு 18,400 கோடி தேவைப்படும். இத்தகைய செலவினத்தை தவிர்ப்பதற்கு
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக
கூறப்படுகிறது.
No comments