சம்பளம் வாங்கி 2 மாசமாச்சி.. புலம்பும் கவுரவ விரிவுரையாளர்கள்..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 40-க்கும் மேற்பட்ட முதுகலை
பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. யுஜிசி விதிகளின்படி ஒரு துறைக்கு ஒரு
பேராசிரியர், இரண்டு இணை, 3 உதவிப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும்.
ஆனால், பல்வேறு துறைகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால்,
70-க்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில்
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாத சம்பளம்
வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
“யுஜிசி, தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.15
ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. நிரந்தர பேராசிரியர்கள் செய்யும் அதே
வேலையை நாங்கள் செய்கிறோம்.
எங்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம்
வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால், ‘சம்பளம் வழங்கும் பிரிவில்
தற்காலிகமாக பணியாற்றிய பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வேலையை
செய்ய இங்கு யாரும் இல்லை’ என சொல்கின்றனர்.
இப்பிரச்னையை
துணைவேந்தர் குமார் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றும் அவரை பார்க்க
அனுமதி கிடைக்கவில்லை. சம்பளம் வழங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.
No comments