Breaking News

குடிநீர் என சானிடைசரை குடித்த பள்ளி மாணவிகள்.. அப்புறம் நடந்த விபரீதம் !!

ஜப்பான் நாட்டின் யமனாஷி மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு குழுவினர் ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தனர்.இந்நிலையில், பந்தயம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.  இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் கூறிய தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அதாவது, கொரோனா காரணமாக பழக்கத்துக்கு வந்த கைகளை கழுவ வைத்திருக்கும் சானிடைசரை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதனை தடகள வீராங்கனைகள் குடிநீர் அருந்த கூடிய பகுதிகளில் போட்டி நடத்துபவர்கள் வைத்து விட்டனர். இதனை அறியாமல்  சானிடைசரை, குடிநீர் என நினைத்து குடித்த மூன்று மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதில் ஒரு மாணவி வாந்தி, எடுத்து போட்டியில் இருந்து விலகியுள்ளார்.  இதேபோன்று மற்ற 2 மாணவிகள் உடனடியாக அதனை வெளியே துப்பி விட்டனர். இதனால் அவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாததால் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் போட்டியிலும் பங்கேற்றனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விநோத சம்பவத்திற்காக தடகள வீராங்கனை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போட்டிக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

No comments