''அலுவலகம் செல்ல வேண்டாம்''.. வீட்டில் இருந்தே வேலை.. முன்னணி ஐடி நிறுவனம் தரும் சூப்பர் ஆஃபர்!
பிரபல ஐடி நிறுவனமான லிவென்டஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு வசதிகளுடன் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்குகிறது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூர் ஜேபி நகரிலும் அமைந்துள்ளது. இதற்கிடையே தான் வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையிலான புதிய ஆஃபருடன் வேலைக்கு நிறுவனம் ஆட்சேர்ப்பு மேற்கொள்கிறது.
தற்போதைய அறிவிப்பின்படி லிவென்டஸ் நிறுவனத்தில் டேட்டா என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். இளங்கலை பிரிவில் மேனேஜ்மென்ட் ஆஃப் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், கணிதம், புள்ளியியல்(Statistics), கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசினஸ் உள்ளிட்ட படிப்புகளை அனலிட்டிக்ஸ் ஃபோக்கசுடன் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். Advanced SQL Queries தெரிந்திருக்க வேண்டும்.
ஏதாவது ETL Tool -ல் (உதாரணம் ADF) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Query Tools பயன்படுத்தி டேட்டா அனலிசிஸ் பிரிவில் 5 முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டெக்னீக்கல் ஸ்பெஷிபிக்கேஷனுக்கு ஏற்ப டிரான்ஸ்லேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதோடு ஊழியர்களுக்கு குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லாபத்தில் இருந்து பகிரப்படும் Incentives உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்த பணிக்கு பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். சந்தேகம் இருப்பின் 804124 9790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
No comments