Breaking News

இனி வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிடிலும் பிறருக்கு பணம் அனுப்பலாம்! Gpayயின் அசத்தல் அம்சம்:

 


Google pay மூலமாக கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பிறருக்கு பணம் செலுத்தக்கூடிய வகையில் 3 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே UPI செயலிகள் இருக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதில் Gpay செயலி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியான Gpay நிறுவனம் Paymentsஐ எளிதாக்க 'Buy Now Pay Later' எனும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் பயனரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கடைக்காரரிடம் பணம் செலுத்தலாம்.

Gpayயின் கடன் அம்சம்

ஒரு பொருளை வாங்கிய பின்னர் உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று தெரிய வந்தால், 'Buy Now Pay Later' அம்சம் மூலம் உங்களுக்கான குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பின்னர் செலுத்தலாம்.

Googleயின் Autofill அம்சம்

Gpayயில் இந்த அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது Chrome, Androidயில் இயக்கப்பட்டுள்ளது.

அதாவது கைரேகை, முகம் ஸ்கேன் அல்லது PINஐ பயன்படுத்தி, பயனரின் விவரங்களைத் தானாக நிரப்ப முடியும்.

இந்த அம்சம் இயக்கப்பட்டதும் உங்களிடம் கூடுதல் பாதுகாப்பு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதில் அளிக்க வேண்டும்.

Google Wallet

சில நாட்களுக்கு முன்பு இந்த அம்சம் Gpayயில் அறிமுகமானது. இதில் நீங்கள் அனைத்து Card விவரங்களையும் சேர்க்கலாம்.

இதனை ஒருமுறை செய்தால், பிறகு அதிக Tension ஆக வேண்டியதில்லை. இதனையும் நீங்கள் Payment Option உடன் இணைத்து எளிதாக கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.

No comments