Breaking News

1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

 

மிழக அரசு சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளை நடத்தவுள்ளது. நவம்பர் 12 முதல் பல்வேறு தேதிகளில் வெவ்வேறு வகுப்புகளுக்கு போட்டிகள் நடைபெறும்.

மாணவர்களுக்கான கல்வி திட்டங்கள்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் படி எதிர்காலத்திற்கு தேவையான கல்வியறிவுக்கு ஏற்ற பாடத்திட்டங்களையும் உருவாக்கி வருகிறது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் தமிழக அரசு வழங்குகிறது. இதுமட்டும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவாது என்பதற்காக விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி, மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் போட்டிகளை நடத்தி வருகிறது.

மாணவர்களுக்கான போட்டிகள்

மேலும் மாணவர்களின் கலை திறமைகளை வளர்க்கும் வகையில் கலைத்திருவிழாவையும் நடத்தி வருகிறது. இதன் படி பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, சிலம்பம் போன்ற பல்வேறு கலைத்திறன் போட்டிகளை நடத்தவுள்ளது. இது தொடர்பான சூப்பர் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான கலைத்திருவிழா

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி

அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடைபெறவுள்ளதால், வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர், மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில், தோராயமாக 2200 அரசு பள்ளி மாணவர்களும், 2000 அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர் என கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு கலைவிழா

மேலும் கலைத்திருவிழா தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அத்ன படி, நவம்பர் 12ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டி நடைபெற உள்ளதாகவும் இந்த போட்டியானது மாகாண அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் காண கலைத் திருவிழா நடைபெற உள்ளதாகும் இந்த போட்டியானது மாகாண அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பரிசு

நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரம்பூரில் போட்டியானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 மற்றும் 18ஆம் தேதிகளில் 9 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கலைத்திருவிழா போட்டி பென்டிங் மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 மற்றும் 18ம் தேதியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கலை விழா போட்டியானது வித்யோதியா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments