Breaking News

அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை கொடுத்த அப்டேட்

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு கால அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். இதற்காக மாணவர்கள் தங்களை வேகமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பிற்கு வரும் டிச 10ம் தேதி தமிழ், 11ம் தேதி விருப்பப் பாடம், 12ம் தேதி
ஆங்கிலம், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், டிச 23ம் தேதி சமூக அறிவியல் என தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச 9ம் தேதி தேர்வுகள் தொடங்கப்பட்டு டிச 23ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், டிச 12ம் தேதி கணினி அறிவியல், டிச 14ம் தேதி உயிரியல், வரலாறு, டிச 17 ம் தேதி கணக்கு, வணிகவியல், டிச 20ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் டிச 23ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் என தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை : டிச 24 ம் தேதி முதல் ஜன 1 ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஜன 2ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.

No comments