Breaking News

புது கார் வாங்க லோன் வேணுமா? ரூ.5 லட்சம் கார் கடன்களுக்கு குறைந்த வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்!

 

கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவு. ஆனால் பட்ஜெட் குறைவாக இருக்கும் காரணத்தினால் சிலர் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலருக்கு சேமிப்பு இருக்கும். ஆனால் அதை அப்படியே பயன்படுத்தி கார் வாங்கினால் பிற்காலத்தில் ஏற்படும் அவசர செலவுகளுக்கு பணம் இருக்காதோ என்ற பயம் இருக்கும். இதை சமாளிப்பதற்காக தான் பெரும்பாலான நபர்கள் கார் கடன்களை நாடுகின்றனர். பொதுவாக கார் கடன்கள் தனிநபர் கடன்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.கார் கடன் பெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நேரடியாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று பெற்று விடக்கூடாது.

சிலர் எந்த சேவையை பெறுவதானாலும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கே செல்கின்றனர். கடன் என்று வரும் பட்சத்தில், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் குறைந்த வட்டியில் கடனை வழங்குகிறதோ? அங்கு தான் விண்ணப்பிக்க வேண்டும்.அதோடு சில முன்னணி நிதி நிறுவனங்கள் கார் டீலர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு குறைந்த கட்டணங்கள் மற்றும் குறைந்த செயலாக்க நேரத்தில் கடன்களை வழங்குகின்றன. இதையும் ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும்.

இன்னும் சில வங்கிகள், தங்கள் வங்கியில் கடன் பெற்று சரிவர பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆஃபர்களை வழங்குகிறது. எனவே உங்களுக்கு மிகவும் சாதகமான வங்கியில் கடன் பெறுவது உங்கள் நிதி நிலைக்கு நல்லது.கிரெடிட் ஸ்கோர்: பொதுவாக வங்கிகளில் கடன் பெற வேண்டுமானால், அதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம். கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண்ணாகும். இதை வைத்து தான் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா?

வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும். இந்த மதிப்பெண் நீங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கும் குழுக் கடன், வீட்டு கடன் போன்றவற்றை எப்படி திருப்பி செலுத்தி இருக்கிறீர்களோ? அதைப் பொறுத்து அமையும்.

நீங்கள் சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்.அதுவே தாமதக் கட்டணங்கள், சில மாதத் தவணைகளை கட்டாமல் இருத்தல் போன்ற காரணங்கள் இருந்தால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கலாம். கிரெடிட் ஸ்கோர் 750-க்கும் அதிகமாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. எந்த வங்கியில் வேண்டுமானாலும் கடன் பெறலாம். அதுவே 750-க்கு கீழ் இருந்தால் அவை நல்ல நிதி நடத்தையாக பார்க்கப்படாது.

அதோடு அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும். அதுவே குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளராக இருந்தால் சில வங்கிகள் அதிக வட்டி விகிதத்தில் கடனை வழங்கலாம். எனவே கார் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.முன்னணி வங்கிகள் 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்துடன் கார் கடன்களை வழங்குகின்றன. வட்டி விகிதங்களைத் தவிர கடன் தருபவரின் பாலிசி குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

செயலாக்க கட்டணம், திருப்பி செலுத்தும் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை பற்றி விசாரிப்பதும் நல்லதுரூ.5 வருட கால அளவைக் கொண்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான கார் கடன்களுக்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.வங்கிவட்டி விகிதம் (%)ஈஎம்ஐ (கடன் தொகை - 5 லட்சம் காலம் - 5 ஆண்டுகள்)பிராசசிங் கட்டணம் (கடன் தொகையில் % )யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா8.70 - 10.4510,307 - 10,735NILபஞ்சாப் நேஷனல் வங்கி8.75 - 10.6010,319 - 10,7720.25% வரை(ரூ.1,000 - ரூ.1,500)பேங்க் ஆஃப் பரோடா8.95 - 12.7010,367 - 11,300ரூ.750 வரைகனரா வங்கி8.70 - 12.7010,307 - 11,300NILபேங்க் ஆஃப் இந்தியா8.85 - 12.1010,343 - 11,1480.25% (ரூ.1,000 - ரூ.5,000)UCO வங்கி8.45 - 10.5510,246 - 10,759Nilபாரத ஸ்டேட் வங்கி9.05-10.1010,391-10,648NILஐடிபிஐ வங்கி8.85 - 9.6510,343 - 10,538ரூ. 2,500மகாராஷ்டிரா வங்கி8.70 - 13.0010,307 - 11,377NILஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி8.85 - 12.0010,343 - 11,1220.50% (ரூ. 500 - ரூ. 5,000)ஐசிஐசிஐ வங்கி9.10 முதல்10,403 முதல்2% வரைஹெச்டிஎப்சி வங்கி9.20 முதல்10,428 முதல்1% வரை (ரூ. 3,500 - ரூ.

9,000)கர்நாடக வங்கி8.88 - 11.3710,350 - 10,9640.60% (ரூ. 3,000 - ரூ. 11,000)பெடரல் வங்கி8.85 முதல்10,343 முதல்ரூ. 2,000 - ரூ.

4,500பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி8.85 - 10.2510,343 - 10,6850.25% (ரூ. 1,000-ரூ. 15,000)சவுத் இந்தியன் வங்கி8.75 முதல்10,319 முதல்0.75% (அதிகப்படியாக: ரூ. 10,000)IDFC பர்ஸ்ட் வங்கி9.60 முதல்10,525 முதல்ரூ. 10,000 வரைசிட்டி யூனியன் வங்கி9.90-11.5010,599-10,9961.25%


No comments