மத்திய அரசு ஊழியர்களின் கதவை தட்டும் குட் நியூஸ்.. 8வது ஊதியக்குழு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி. ஊதிய உயர்வு கோரி நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்த கமிஷன் அமலுக்கு வருவதால், அடிப்படை சம்பள உயர்வு மட்டுமின்றி, மற்ற படிகளும் உயரும்.
10 வருடங்களுக்கு ஒரு முறை புதிய ஊதியக் குழுவை அரசாங்கம் அமைக்கிறது. இது ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற வசதிகளை மதிப்பாய்வு செய்கிறது. முன்னதாக, 2014ல் அமைக்கப்பட்ட 7வது ஊதியக்குழு 2016ல் அமல்படுத்தப்பட்டது. இப்போது 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
8வது ஊதியக்குழுவின் அதிகாரப்பூர்வ தேதியை இதுவரை இந்திய அரசு அறிவிக்கவில்லை. 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், அரசு முறையான அறிவிப்பை வெளியிடும் வரை ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்.
8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.34,560 ஆக உயரலாம், அதாவது 52% அதிகரிப்பு. ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையானது ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. எட்டாவது ஊதியக் குழுவில் அது 1.92 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பயன்பெற வாய்ப்புள்ளது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு பிறகு இது ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
8வது ஊதியக் குழுவைப் பற்றி விவாதிக்க கூட்டு ஆலோசனைக் குழுவால் நவம்பர் மாதம் ஒரு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் ஊழியர்களின் சேவை நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்படும், மேலும் தொழிற்சங்கங்கள் ஊதிய கமிஷன் கோரிக்கைகளை முன்வைக்கின்றன.
No comments