Breaking News

குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!

 

குழந்தைகளை திட்டாமல் படிக்க வைக்க பெற்றோர்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் ஸ்கூல் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களை படிக்க வைப்பது பெற்றோர்களின் முக்கிய கடமை ஆகும். ஆனால் தற்போது குழந்தைகள் டிவி, மொபைல் மற்றும் வீடியோ கேமில் அதிக நேரம் செலவழிப்பதால் படிப்பில் ஆர்வமாக இருப்பதில்லை.

இதை சரி செய்து குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோரின் பொறுப்பு என்றாலும், அவர்களை படி படி என்று திட்டக்கூடாது. அது தவறு. மாறாக பெற்றோர்கள் சிலர் விஷயங்களை பின்பற்றினால் மட்டும் போதும். குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரித்து, தானாகவே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தைகளை திட்டாமல் படிக்க வைப்பது எப்படி?

அன்பாக பேசுங்கள்

குழந்தைகளிடம் விளையாட்டுத்தனம் அதிகமாகவே இருக்கும். அதற்காக எப்போதுமே விளையாடுவது சரி அல்ல. குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு படிப்பும் அவசியம். ஆனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் வருவதில்லை. எனவே குழந்தைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர பெற்றோர்கள் முதலில் குழந்தைகளிடம் அன்பாக பேச வேண்டும். ஆம், பல பெற்றோர்கள் இதை செய்ய தவற விடுகிறார்கள். எனவே, ஒருமுறை உங்கள் குழந்தையிடம் அன்பாக பேசி படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி தான் பாருங்களேன்.

அவர்கள் அருகில் இருங்கள்

உங்கள் குழந்தையிடம் படி என்று சொல்லிவிட்டு நீங்கள் மொபைல் பார்ப்பது டிவியில் சீரியல் பார்ப்பது என்று இருக்காதீர்கள். அது தவறு. மேலும் குழந்தைகள் படிக்கவும் மாட்டார்கள். உங்கள் குழந்தை படிக்க முதலில் அதற்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து, அந்த நேரம் முடியும் வரை தினமும் குழந்தையின் அருகில் அமர்ந்து அவர்களை படிக்க வைக்கவும். இதனால் குழந்தைகள் நன்றாக படிக்க ஆரம்பிப்பார்கள்.

சிறிது நேரம் விளையாட்டு சிறிது நேரம் படிப்பு

குழந்தை படிக்கும் போது உங்களால் எவ்வளவு நேரம் அவர்களது அருகில் அமர்ந்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருங்கள். மேலும் படிப்பை குழந்தைகள் கஷ்டமாக உணராதபடி வேடிக்கையாக கொண்டு செல்லுங்கள். இதற்கு சிறிது நேரம் படிப்பு சிறிது நேரம் விளையாட்டு என்று இருக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் படிக்கும் போது அவர்களுக்கு எப்படி படிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு புரியாத விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.

படிக்கும் சூழல்

குழந்தைகளுக்கு படிக்கும் சூழல் அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்து கொடுப்பது பெற்றோரின் கடமை. ஒருவேளை குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து படிக்க பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பிடித்த ஒரு இடத்தை வெளியில் அமைத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு படிக்கும் சூழலை அமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துங்கள்

குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது அவர்கள் படிப்பை தவிர வேறு ஏதாவது விஷயத்தில் அதிக ஆர்வமாக இருந்தால் அது என்ன என்பதை கண்டறிந்து அதில் அவர்களை ஊக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகளை புத்தகப் புழுவாக மாற்றாமல் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொடுங்கள்.

குறிப்பு : மேலே சொன்ன விஷயங்களை பெற்றோர்கள் பின்பற்றினால் குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். இது தவிர குழந்தைகள் ஏதேனும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது அவர்களை சோதிக்க வேண்டும்.

No comments