Breaking News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2024


திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:810

 விழையார் விழையப் படுப பழையார்கண்

 பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:

(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."

பழமொழி :

தூய்மை என்பது தெய்வபக்திக்கு அடுத்தது.  

Cleanliness is next to Godliness.

இரண்டொழுக்க பண்புகள் : 

 *மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.

* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே  நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.

பொன்மொழி :

காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்

பொது அறிவு :

1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன?

லூக்கோசைட்ஸ்.

2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன ?

எரித்ரோசைட்ஸ்.

English words & meanings :

 Fenugreek Seed-வெந்தயம்,

Garlic-பூண்டு

வேளாண்மையும் வாழ்வும் :

பயிர் சுழற்சி, பசுந்தாள் எரு, மூடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பேபேசியே குடும்பத்தாவரங்களைப் பயிரிடும்போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை  வளி மண்டலத்திலிருந்து எடுத்து பொருத்துகிற்து.

நவம்பர் 11 இன்று

தேசிய கல்வி நாள்

தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.

மௌலானா அபுல் கலாம்  ஆசாத் 

1001007006

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காள: আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ, உருது: مولانا ابوالکلام محی الدین احمد آزاد) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கதை

எலுமிச்சம் பழம்

முதல் நாள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் அடுத்த நாள், எலுமிச்சம் பழம் கொண்டு வருமாறு பேராசிரியர் கூறினார்.

 ஏன்? எலுமிச்சம்பழம் என்ற வினாவோடு மாணவர்கள் அனைவரும் எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தனர்.

"அவரவரின் பெயரின் முதல் எழுத்தை  எலுமிச்சம் பழத்தின் மேல் செதுக்குங்கள்" என்றார் பேராசிரியர். மாணவர்கள் செதுக்கினார்கள். ஒரு கூடை ஒன்றில்  அனைத்து பழங்களையும்  போடச் சொன்னார்.நன்றாக கலந்தார்.

பின்பு மாணவர்கள் அனைவரையும் அவரவர் பழங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களும்  அவரவர் தம் முதல் எழுத்தை கொண்டு பழங்களை சரியாக எடுத்துக் கொண்டனர்.

பின்பு எலுமிச்சம் பழத்தின் தோலை அகற்றிவிட்டு கூடையில் போடச் சொன்னார். மீண்டும் கலந்தார். மீண்டும் அவரவர் பழங்களை எடுக்குமாறு கூறினார்.  ஆனால் மாணவர்களால் எடுக்க  இயலவில்லை.

 அப்போது பேராசிரியர்  "தோலை நீக்கிவிட்டால் அனைத்து எலுமிச்சம் பழங்களும் ஒன்றுதான். ஆனால் அதன் சுவை எப்போதும் மாறுவது இல்லை. அதேபோலத்தான் மாணவர்களாகிய நீங்களும் எந்த  சமூக வேறுபாடுகளின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் அனைவரும் மனித பண்புள்ளவர்கள்.  மனிதநேயத்தை எப்போதும் விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரும் பழக வேண்டும். இதுவே உங்களுக்கு முதல் பாடம்" என்று முடித்தார்.

இன்றைய செய்திகள் - 11.11.2024

* கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 3.3 ரிக்டர் அலகில் லேசான நில அதிர்வு: வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்.

* தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நாய்க்கடி பாதிப்பு. ரேபிஸ் நோயால் 36 பேர் உயிரிழப்பு என பொது சுகாதாரத் துறை தகவல்.

* ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார்  வனப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.  மேலும் 3 ராணுவ வீரர்கள்  காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்: தேடும் பணி தீவிரம்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் பெற்றார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

Today's Headlines

* Mild earthquake of magnitude 3.3 Richter scale is felt in Bochampalli area of ​​Krishnagiri district: People came out of their homes.

*  4 lakh people are affected by dog ​​bites in Tamil Nadu this year alone.  According to the Public Health Department, 36 people have died due to rabies.

* An army soldier was  dead and three injured in a gunfight with militants in Jammu and Kashmir's Kishtwar forest, officials said.

* 43 monkeys escaped from a research laboratory in the United States: the search is intensified.

 * Women's Tennis Championships: American  player Coco Cope won championship.

 * Pakistan won the 3 ODI match series against Australia by 2-1.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments