Breaking News

உங்ககிட்ட ஸ்மார்ட்போன் இருக்கா? அப்போ உடனே இந்த 3 செட்டிங்கை OFF பண்ணுங்க.. இல்லாட்டி ஒட்டுகேப்பாங்க..

 

ங்களிடம் விலை உயர்ந்து ஸ்மார்ட்போன் (Smartphone) இருந்தாலும் சரி, அல்லது பட்ஜெட் விலையில் எதோ ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் (Mobile phone) இருந்தாலும் சரி, உடனே உங்கள் போனை கையில் எடுத்து, மொபைல் செட்டிங்ஸ் (settings) சென்று, யோசிக்காமல் இந்த 3 அம்சங்களை நீங்கள் ஆஃப் (OFF) செய்ய வேண்டும் மக்களே.

உங்கள் போனின் மூலம் உங்களை நோட்டம் விட்டு, நீங்கள் பேசும் தகவல்களை ஒட்டுக்கேட்டு, பல மறைமுகமான விஷயங்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தொடர்ந்து நடக்கிறது என்பதே உண்மையாகும். இதை தடுக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.

உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்களை ஒரு கும்பல் மறைமுகமாக கண்காணித்து வருகிறது. நீங்கள் பேசும் தகவல்களை இந்த கும்பல் ஒட்டுக்கேட்கிறது. நீங்கள் செல்லும் இடங்களின் தகவலை எல்லாம் இவர்கள் நோட் செய்து வைக்கிறார்கள். இதை வைத்து தான் உங்களுக்கு கூகுள் ஆட்ஸ் மூலம் நீங்கள் பேசிய வார்த்தைக்கு தொடர்பான விளம்பரங்கள் உங்கள் போனில் காண்பிக்கப்படுகிறது. இதுவொரு நூதனமுறை ஸ்பையிங் மக்களே.

உதாரணமாக, நீங்கள் உங்கள் மனைவியிடம் புதிதாக ஒரு லேப்டாப் வாங்கலாம் என்று எதிர்ச்சியாக பேசியிருப்பீர்கள், அடுத்த சில மணி நேரத்தில், நீங்கள் உங்கள் வெப் பிரௌரில் எந்த பக்கத்தை திறந்தாலும் உங்களுக்கு லேப்டாப் தொடர்பான தகவல்கள், தள்ளுபடிகள் மற்றும் விற்பனை தகவல்கள் போன்ற விளம்பரங்கள் காண்பிக்கப்படும். இதற்கு முக்கியமான காரணம் உங்கள் போனை ஆப்ஸ் மூலமாக ஒட்டுக்கேட்பது தான்.

நீங்கள் பேசும் தகவல், நீங்கள் செல்லும் இடங்களின் தகவலை யாரும் கண்காணிக்கவே கூடாது, உங்கள் மொபைல் பயன்பாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், உடனே கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 முக்கியமான செட்டிங்ஸ்களை OFF செய்யுங்கள். முதலில், கூகிள் ஆப்ஸ் இல் உள்ள வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி விருப்பத்தை ஆஃப் செய்யுங்கள்.

1. டிசேபில் கூகிள் ஆப்ஸ் வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி (Disable voice and audio activity in Google App):

- உங்கள் போனில் Google திறக்கவும்.

- ப்ரொபைல் (Profile) கிளிக் செய்து மேல் வலது மூலையில் உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

- டேட்டா மற்றும் பிரைவசி (Data and Privacy) செய்யவும்.

- வெப் மற்றும் ஆப் ஆக்ட்டிவிட்டி (Web and App Activity) கிளிக் செய்து OFF செய்யவும்.

- இனி உங்களை யாரும் ஒட்டுக்கேட்க முடியாது.

2. மை ஆட் சென்டர் OFF செய்யவும் (Turn off personalised Ads in My Ad Centre):

- உங்கள் போனில் Google ஆப்ஸ் திறக்கவும்.

- My Ad Centre விருப்பத்திற்கு செல்லவும்.

- Personalised Ads விருப்பத்தை கிளிக் செய்து ஆப் செய்யவும்.

- இதற்கு பிறகு, உங்கள் போனில் நீங்கள் தேடிய தகவலுக்கு தொடர்பான அதிக விளம்பரங்கள் காண்பிக்கப்படமாட்டாது.

3. கூகிள் மேப்ஸ் லொகேஷன் OFF செய்யுங்கள் (Stop location tracking on Google Maps):

- உங்கள் போனில் Google மேப்ஸ் திறக்கவும்.

- Profile கிளிக் செய்து, டேட்டா (Data) என்பதை மேப்ஸில் கிளிக் செய்யவும்.

- Location History விருப்பத்தின் கீழ் டிசேபில் செட்டிங்கை கிளிக் செய்யவும்.

- இதன் மூலம் இனி நீங்கள் செல்லும் இடங்களின் விபரங்களை யாரும் கண்காணிக்க முடியாது.

இதைச் செய்வதன் மூலம், உங்கள் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களை யாருக்கும் தெரியாமல் மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்டதாகவும் நீங்கள் வைத்திருக்க முடியும்.

No comments