இந்திய மாணவர்கள் ஏன் MBBS படிக்க ரஷ்யாவை நோக்கி ஓடுகிறார்கள் தெரியுமா? இந்த 2 விஷயங்கள்தான் காரணமாம்...!
சமூகத்தில் மனிதர்களால் எப்போதும் மதிக்கப்படும் ஒரு துறை என்றால் அது மருத்துவத்துறைதான். ஏனெனில் மக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் மற்றும் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான பணியாக மருத்துவர் வேலை உள்ளது.
அதனால்தான் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவராவதை தங்கள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் மருத்துவராகும் ஆசையுடன் கோடிக்கணக்கான மாணவர்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள். தற்போதைய போட்டித் தேர்வுகளில் நடக்கும் அரசியலும், முறைகேடுகளும் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. அதனால்தான் பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில், தனியார் மருத்துவக் கல்விக்கான செலவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, இங்குள்ள குறைவான மருத்துவ இடங்களும் கூட இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால் பல இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் MBBS படிப்பதற்கு முன்னுரிமைக் கொடுக்கிறார்கள், அங்கு கட்டணம் குறைவாக உள்ளது மற்றும் வெளிநாட்டில் பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
ரஷ்யா, ஜார்ஜியா, சீனா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் இந்திய இளைஞர்கள் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். மருத்துவம் படிக்க உகந்த வெளிநாடுகளில் இந்திய மாணவர்களின் முதல் விருப்பமாக ரஷ்ய உள்ளது.
இந்திய மாணவர்கள் ஏன் ரஷ்யாவில் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர்?
ரஷ்ய மருத்துவக் கல்லூரிகள் தரமான பயிற்சி மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களுடன் மருத்துவக் கல்வியை இந்தியாவுடன் ஒப்பிடும்போது குறைவான செலவில் வழங்குகின்றன. ரஷ்யாவில் MBBS டிகிரி படிக்க, இந்திய மாணவர்கள் முதலில் NEET UG தேர்வில் குறைந்த பட்சம் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் அவர்களின் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் - இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ரஷ்ய மருத்துவக் கல்லூரிகளில் ஆன்லைனில் கூட அட்மிசன் பெறலாம், இது மற்ற நாடு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதை மேலும் எளிதாக மாற்றுகிறது.
ரஷ்ய மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணம்
இந்தியாவில் MBBS டிகிரியை முழுமையாக முடிக்கு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இந்த தொகையை ரஷ்ய மருத்துவ கல்லூரிகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கிறது. கல்லூரியைப் பொறுத்து ரஷ்யாவில் மருத்துவப் படிப்பிற்க்கு 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
கல்லூரி காலம் ரஷ்யாவில் ஆறு ஆண்டுகள் ஆகும், இதில் ஒரு வருட இன்டர்ன்ஷிப் அடங்கும். இது இந்தியாவில் உள்ள 5.5 ஆண்டு எம்பிபிஎஸ் திட்டத்தை விட சற்று நீளமானது, இங்கு பயிற்சிகள் பொதுவாக பாட அமைப்பில் சேர்க்கப்படவில்லை.
ரஷ்ய MBBSக்கு இந்திய MBBS0க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் உள்ள MBBS டிகிரிக்கு இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு செலவு மட்டும்தான், ரஷ்ய கல்லூரிகள் இந்திய மாணவர்களுக்கு மிகவும் குறைவான செலவில் டிகிரியை முடிக்க வாய்ப்பளிக்கிறது. ரஷ்யாவின் ஆறு வருட MBBSS பாடத்திட்டத்தில் கட்டாயமாக ஒரு வருட இன்டர்ன்ஷிப் அடங்கும், இது மாணவர்களை மருத்துவ பயிற்சிக்கு தயார்படுத்த சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், இன்டர்ன்ஷிப் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. கூடுதலாக, ரஷ்ய மருத்துவப் பட்டங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவை, இது இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலையைத் தொடர கூடுதல் வாய்ப்புகளை அளிக்கிறது, இது இந்திய மாணவர்கள் ரஷ்யாவைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணியாகும்.
No comments