அன்பில் மகேஷ் செய்த சம்பவம்.. “இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்”! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்:
பட்டியலின மக்களின் சாதியை குறிப்பிடும் வகையில் அரசு பள்ளிக்கு
முகவரி இருந்தது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் கறுப்பு மை கொண்டு அழித்து
மாற்றினார். இந்த செயலுக்கு காரணமாக இருந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் இன்னமும் சில மாநிலங்களில் பெயர்களுக்கு பின்னால் சாதியை
சேர்த்துக்கொள்வது பெறுமையாக கருதப்படும் நிலையில், தமிழ்நாட்டில்
மட்டும்தான் பெயருக்கு பின்னால் படிப்பை சேர்துக்கொள்வது கவுரவமாக
பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கும், புரிதலுக்கும் கல்வி
இன்றியமையாததாகும்.
இக்கல்வியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமை
திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது. இப்படி இருக்கையில் பள்ளியின் முகவரியில்
சாதிய அடையாளம் இருந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கிராம
மக்களிடையே நெருடலை ஏற்படுத்தி வந்தது.
anbil mahesh government school
இப்பள்ளியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதன் முகவரியாக 'ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை
மாற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் நீண்ட காலமாக முயன்று வந்திருக்கின்றனர்.
ஆட்சியாளர்களுக்கும் வலியுறுத்தியுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில்,
இன்று அதிரடியாக அப்பளிக்கு விசிட் செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ், கறுப்பு மை கொண்டு முகவரியை அழித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் கூறுகையில், "நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர்
மக்களின் கோரிக்கையாக இருந்தது.
No comments