2025ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு | எத்தனை முறை தொடர்விடுமுறைகள் வருகிறது... இப்பவே நோட் பண்ணிக்கோங்க!
2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. 2025ம் வருடத்தை வரவேற்க இப்போதே பல நாடுகளிலும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
புது வருடத்தை எங்கே கொண்டாடுவது என்பதில் துவங்கி, சுற்றுலாவுக்கான இடங்களை முன்பதிவு செய்வது வரை திட்டம் தீட்டி வருகின்றனர். புத்தாண்டுக்கான முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களின் பட்டியலை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியலும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எத்தனை முறை வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறைகள் வருகின்றன என்று செக் செய்து அதற்கேற்ப உங்கள் பயண திட்டங்களைப் ப்ளாண் பண்ணிக்கோங்க.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும், அரசு சார்பில் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களின் அடிப்படையில் சீராக இயங்கும். அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ள முடியும்.
No comments