Breaking News

காளஹஸ்திக்கு போய்விட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கலாமா? ஆன்மீகம் சொல்வது என்ன?

 


திருப்பதி: திருப்பதிக்கு போகும் போது முதலில் காளஹஸ்திக்கு சென்றுவிட்டு ஏழுமலையானை தரிசிக்கலாமா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இல்லாவிட்டால் திருப்பதிக்கு போய்விட்டு வரலாமா என்ற கேள்விக்கான பதிலையும் பார்க்கலாம்.

பொதுவாக திருப்பதிக்கு செல்வோருக்கு ஒரு குழப்பம் இருக்கும். அதாவது திருப்பதிக்கு தற்போது ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை புக் செய்துவிடுகிறோம். முன் கூட்டியே திருப்பதிக்கு செல்லும் போது அந்த நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக திருகாளஹஸ்திக்கு போய்விட்டு பிறகு திருப்பதிக்கு செல்லலாம் என கருதுகிறார்கள்.

இது தவறான வழி முறை என்கிறார்கள். விஷ்ணு, சிவன் கோயில்களுக்கு சென்றால் வீட்டிற்கு வரும் போது சிவன் கோயிலில் இருந்துதான் வர வேண்டும் என சொல்கிறார்கள். இதனால் திருப்பதியை பார்த்துவிட்டு பிறகு காளஹஸ்திக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் பலருக்கும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதால் அதை தெளிவுப்படுத்துகிறோம். இதுகுறித்து ஜோதிடர் ராஜயோகம் கே.ராம் என்பவர் புதுயுகம் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதாவது காளஹஸ்திக்கு ராகு தோஷம், சர்ப தோஷம், காலசர்ப தோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய செல்ல வேண்டும்.

எந்தவொரு பரிகார ஸ்தலமாக இருந்தாலும் அங்கு ஒரு இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் செய்ய வேண்டும். அதாவது காளஹஸ்திக்கு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்கிவிட்டு பிறகு அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு அங்குள்ள பாதாள விநாயகரை வழிபட வேண்டும். அவரிடம் உங்கள் வேண்டுதலை வைத்துவிடுங்கள்.

இதன் பிறகு உங்கள் தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அதன் பிறகு தானம் தர்மங்களை செய்யலாம். அதாவது திருப்பதி, காளஹஸ்தி, ராமேஸ்வரம், காசி உள்ளிட்ட தலங்களை பிரிக்க வேண்டும். அதாவது பரிகார ஸ்தலம், புண்ணிய ஸ்தலம், ஆன்மீக ஸ்தலம் ஆகியவை ஆகும்.

காளஹஸ்தி என்பது பரிகார ஸ்தலம், திருப்பதி என்பது புண்ணிய ஸ்தலம். பரிகார ஸ்தலத்திற்கு சென்றுவிட்டு புண்ணிய ஸ்தலத்திற்கு செல்லக் கூடாது. காளஹஸ்திக்கு சென்றுவிட்டு வீட்டில் ஒரு இரவாவது தங்கிவிட்டு அடுத்த நாள் திருப்பதிக்கு செல்லலாம். இதனால் உங்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.

ஒரு வேளை வீடு ரொம்ப தூரத்தில் இருக்கிறது என்றால் கீழ் திருப்பதிக்கு சென்று அங்கு அறை எடுத்து ஒரு நாள் இரவு தங்கி அங்கு குளித்துவிட்டு அடுத்த நாள் திருப்பதிக்கு செல்லுங்கள். அப்போதுதான், திருப்பதிக்கு சென்றால் கிடைக்க வேண்டிய திருப்பமும் புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.

No comments