Breaking News

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நவ. 25 முதல் 29 வரை…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

 


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அண்மைக்காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 25 முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இந்த உத்தரவினை அனைத்து பள்ளிகளுக்கும் பிறப்பித்துள்ளார்.

No comments