வயதுக்கு ஏற்ப எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? பலன்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் எளிதான மற்றும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். இது இதய ஆரோக்கியம் முதல் மன அமைதி வரை பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
இதன் சிறப்பே, எல்லா வயதினரும் மிக எளிதாக செய்யலாம் என்பது தான். இருப்பினும், ஒவ்வொரு நபரின் வயதைப் பொறுத்து எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என உள்ளது. இது அவர்களின் உடல் தேவைகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்நிலையில், வயதுக்கு ஏற்ப எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
18-30: இளைஞர்கள் பொதுவாகவே தசை வலிமை உடையவர்கள். இதன் விளைவாக, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தினசரி 30-60 நிமிடங்கள் எளிதாக நடக்க முடியும். இவ்வாறு செய்வதால் உடல் எடை கட்டுப்படும், மன அழுத்தம் குறையும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இடை இடையேயான நேரங்களில் நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
31-50: இந்த குறிப்பிட்ட வயதினர், 30-45 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மன அமைதியையும் தருவதாக கூறப்படுகிறது. மதிய உணவு இடைவேளையின் போதும் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறுகிய நடைப்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
51-65: 51-65 வயதுடையவர்களுக்கு 30-40 நிமிடங்கள் நடந்தால் போதுமானது. உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தசைகள் மற்றும் செரிமான அமைப்பின் செயல்பாடு குறைகிறது. எனவே உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நடைபயிற்சி எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்கிறது. தேவைப்பட்டால் குச்சி போன்றவற்றின் உதவியுடன் நடப்பது நல்லது. காயங்களைத் தவிர்க்க நடைபயிற்சிக்கு முன் வார்ம்-அப் மற்றும் நடைபயிற்சிக்குப் பிறகு கூல்-டவுன் எக்ஸர்ஸைஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
66-75 வயது: ஒவ்வொரு நாளும் 20-30 நிமிடங்கள் நடப்பது 66-75 வயதுடையவர்களுக்கு பல நன்மைகளைக் தருகிறது. குறிப்பாக இதய நோய்கள் வராமல் காக்கும் என்றும் கூறப்படுகிறது. வயதானவர்களுக்கு நடைபயிற்சி நினைவாற்றலை மேம்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நாள்பட்ட நோய்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் தலா 15 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளில் நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
75 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் 15-20 நிமிடங்கள் நடந்தால், அவர்களின் மூட்டுகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:
நடக்கும்போது கரடுமுரடான பாதைகளை தவிர்த்து சமமான மற்றும் பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.நடைப்பயிற்சியின் போது பொருத்தமான காலணிகள் அணிய பரிந்துரைக்கப்படுகின்றன.
No comments