Breaking News

வாய்வு தொல்லைக்கு காரணம் இதுதான்... மோர், பெருங்காயம் குடிங்க... மருத்துவர் சிவராமன் சொல்லும் தீர்வு:

 

லருக்கும் வாய்வு தொல்லை இருக்கும், அதனால், உடலில் ஏற்படும் விளைவுகளை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

மருத்துவர் சிவராமன், வாய்வு தொல்லைக்கான காரணங்களைக் கூறி, வாய்வு தொல்லையைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறியுள்ளார்.

வாய்வு தொல்லை பற்றி கூறும் மருத்துவர் சிவராமன், வாய்வு தொல்லை இருந்தால் சாப்பிட்டால் தொடர்ந்து ஏப்பம் வருதல், சாப்பிட்ட பிறகு வயிறு உப்பி பெரியதாக இருந்தல், மலம் கழிப்பதற்கு முன்பு அதிகம் வாயு பிரிதல் இருக்கும், இது அஜீரணத்தால் ஏற்படுகிறது, இந்த வாய்வு தொல்லை இருப்பவர்கள் சோர்வாக இருப்பார்கள் என்று கூறுகிறார்.

வாயுத் தொல்லை இருந்தால் மூட்டு வலி வரும் என்கிறார். மருத்துவர் சிவராமன். ஆனால், நவீன மருத்துவம் இதை ஒப்புக்கொள்வதில்லை, ஆனால், நமது சித்த மருத்துவம், வாய்வு தொல்லையால் மூட்டு வலி வரும் என்கிறது. வாய்வு தொல்லையால் சரியாக உணவு ஜீரணம் ஆகாவிட்டால், உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அதாவது சின்ன சின்ன தனிமங்கள் கிடைக்காமல் போவதால், எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் மூட்டு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

வாய்வு தொல்லை ஏற்படுவதற்கு சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது முக்கியக் காரணம் என்கிறார். அதோடு, பார்த்ததும் பசியைத் தூண்டும் விதமாக இருக்கும் எண்ணெய் பொருட்கள், மசாலா உணவுப் பொருட்கள், துரித உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும் வாய்வு தொல்லை ஏற்படுகிறது என்கிறர். மருத்துவர் சிவராமன்.

அதுமட்டுமல்ல, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றாலும் இந்த வாய்வுத் தொல்லை ஏற்படும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

வாய்வு தொல்லையைப் போக்க, கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது என்கிறார். குறிப்பாக, உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கிறார். நீங்கள் சாப்பிட்டு ஆக வேண்டும் என்றால் சிறிது அளவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.

வாய்வு தொல்லையைப் போக்க, மோரில் சிறிது அளவு பெருங்காயம் சேர்த்து குடிக்கலாம். சீரகத் தண்ணீர் குடிக்கலாம். புதினா, கொத்தமல்லி சட்னி செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் ஆலோசனை கூறுகிறார். வாய்வு தொல்லைப் போக்க அன்னப்பொடி செய்து சாப்பிடும்போது சேர்த்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இந்த அன்னப்பொடியை நீங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பெருங்காயம், சீரகம், கருஞ்சீரகம், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த அன்னப்பொடியை சாபிடும்போது சிறிது அளவு சேர்த்து சாப்பிட வேண்டும்.

வாய்வுத் தொல்லையால் வயிற்றுப் புண்கள் உருவாகும், இதனால், சாப்பிட்டால் எதுக்கலிக்கும். அதனால், சீரகத் தண்ணீர் குடித்தால் அகம் சீராகும். காரத்தைக் குறைவாக சாப்பிடுங்கள். மேலும், மனக் கலக்கம், மன அழுத்தம் இருந்தாலும் இந்த வாய்வு தொல்லை இருக்கும். அதனால், மன அழுத்தம் இல்லாமல் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

No comments