பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.04.22 PDF DOWNLOAD
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
குறள் : 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.
பொருள்:
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்
பழமொழி :
Clouds that the sun builds up darken.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.
2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
பொறுமை ஒரு கசப்பான செடி, ஆனால் அதன் பழம் இனிமையானது___சீனப் பழமொழி
பொது அறிவு :
1. காய்கறி தங்கம் என்றழைக்கப்படும் மலர் எது?
காலிபிளவர்.
2. ஒரு சிங்கம் கர்ஜிப்பது தோராயமாக எவ்வளவு தூரம் கேட்கும்?
5 கி.மீ.
English words & meanings :
Decomposers - a micro organism which decomposes the organic materials, உயிரி பொருட்களை சிதைக்கும் நுண்ணுயிர்கள்,
disinfectant - a substance that destroys harmful organisms, கிருமி நாசினி
ஆரோக்ய வாழ்வு :
முலாம்பழம் உடல் உஷ்ணத்தைப் போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க வல்லது, வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியது. மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. கண் பார்வை நலத்திற்கு மிகவும் உதவுகிறது. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சிக்கு வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துக்கள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. கோடைக்கால உஷ்ணத்தை தணிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
கணினி யுகம் :
Ctrl + K - Insert link.
Ctrl +U - Underline highlighted selection
ஏப்ரல் 07
உலக நலவாழ்வு நாள்
உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது
உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல்
கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின்
கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக்
கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு
நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு
கொண்டாடப்படுகின்றது.
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் . (7
ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால்
கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு
கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில்
அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார் தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின்
தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய
தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும்
எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர்
தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக்
கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த்
1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.
நீதிக்கதை
தங்கத்தூண்டில்
ஒரு
ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும்
மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க
சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான்.
எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.
அந்த
பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது
தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். ,
இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு,
தடுத்தான்.
அதை
கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற
நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம்
வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா
தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான்.
அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு
அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.
இப்படி
பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க
கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது
எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான்.
பல
நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள்
ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை
வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு
இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது
பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.
தன்
வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது.
அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு
குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும்.
எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான்
சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான்.
நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.
ரமேஷ்யை
பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான்.
ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர்
பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை
பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு
தீர்ப்பு! வழங்கப்பட்டது.
நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
07.04.22







Today's Headlines







Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments