10வது கணிதம் பொதுத்தேர்வுக்கு, பயிற்சி 8.4 உண்டா இல்லையா? விளக்கம்:
✒️ குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நிகழ்ச்சிகளின் செயல்பாடு உள்ளது (L.O. No.8.5 - Algebra of Events)
ஆனால், நிகழ்தகவின் கூட்டல் தேற்றம் நீக்கப்பட்டுள்ளது (L.O. No.8.6 - Addition Theorem of Probability)
✒️ இரண்டு L.O.க்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது. இதுதான் குழப்பத்திற்கு மூலகாரணம்.
✒️ பயிற்சி 8.4ல் உள்ள பெரும்பாலான கணக்குகள் நீக்கப்பட்ட பகுதியின் (L.O- 8.6) அடிப்படையில்
உள்ளது.
✒️ ஆகவே, மெல்லக் கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கு பயிற்சி 8.3 மட்டும் போதுமானது. செப்டம்பர் 2021 தேர்விலும், பயிற்சி 8.3 இல் இருந்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.
✒️ மீத்திறன் மாணவர்களுக்கு..
Algebra of Events (L.O-8.6)-ன்படி அமைந்த, ஒரு சில கணக்குகளை,
கூடுதலாக பயிற்சியளிக்கலாம் என்று பல ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவையாவன...
Example 8.27 Pg-327
Example 8.31 Pg-328
Exercise-8.4. Qn. 2 (i),(ii)
Exercise- 8.4. Qn. 3
Exercise- 8.4. Qn. 5
Exercise- 8.4. Qn. 7
இவற்றுள் Example-8.31 முக்கியமான கணக்கு ஆகும்.
மிக்க நன்றி🙏🙏
மெ. பழனியப்பன், காரைக்குடி
No comments