Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து, 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



No comments