தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்.. தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு..!
“தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொது
இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள்
முகக்கவசம் அணிவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” என்று முதல்வர்
ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இதனிடையே, பொது இடங்களில்
முகக்கவசம் அணியாத மக்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இதனையடுத்து,
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி
பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே எழுந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும்போது
மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே
மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி
வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இத்தகைய சூழலில், தமிழகத்தில் கொரோனா தொற்றின்
எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது
கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
No comments