Breaking News

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்: கணினி வழித் தேர்வு அறிமுகம்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட  வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியிடத்துக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கணினி வழியில் தேர்வு நடத்துவது இது முதன்முறையாகும். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுடன் பிற பணியிடங்களுக்கான தேர்வுகளை டின்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  16 காலியிடங்களை கொண்ட இந்த பணியிடத்துக்கு ஜூன் 19ம் தேதி இரண்டு பகுதிகளாக தேர்வு நடைபெறுகிறது.

காலை 9.30 முதல்  12.30 மணிவரை பாடத் தேர்வும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு நடைபெறும். இந்த இரு தேர்வுகளும் கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.மேலும், விண்ணப்பதாரர்கள்  இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போதே அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள்/ உரிமை கோரல்களுக்கு  ஆதாரமான அனைத்து தேவையான சான்றிதழ்களையும் இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போதே, அனைத்து ஆதார சான்றிதழ்களையும் / ஆவணங்களையும் PDF வடிவில் 200 KBக்கும் மிகாமல்  கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையாக தகவல்களை தெரிந்துகொள்ள இந்த பக்கத்தை கிளிக் செய்யவும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடம் தொடர்பான அறிவிப்புக்கு - இதனை கிளிக் செய்யவும்

 

No comments