Breaking News

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி..! - உடனே விண்ணப்பியுங்கள்:

காலிப் பணியிடங்கள்: 

பணியிடங்கள்எண்ணிக்கை
ஒதுக்கீடு அற்றதுபட்டியல் கண்ட சாதிகள்(எஸ்சி)பட்டியல் கண்ட பழங்குடிகள்(எஸ்டி )இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(ஓபிசி)பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மொத்தம்மாற்றுத்திறனாளிப் பிரிவுகளின்#
ABCD
1.உதவி மேலாளர்  – ராஜ்பாஷா321006-(1)--
2. உதவி மேலாளர்  – Protocol & Security12 (1)0003----

கல்வித் தகுதி: உதவி மேலாளர் ( ராஜ்பாஷா ) பணிக்கு விண்ணப்பிக்க, இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

வயது வரம்பு :  March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு, இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தப்படும். அதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த  மாணவர்களுக்கு  3 ஆண்டுகள் வயது வரம்பில் தளவு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வுண்டு.

உதவி மேலாளர் (பாதுகாப்பு மற்றும் நெறிமுறை) :

விண்ணப்பிக்கத் தகுதி: March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கிடையாது.

இராணுவம்/கப்பற்படை/விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதிகாரியாக பணியமர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

Sr. No.வகைகட்டணம்தொகை *
1.எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி வகுப்பினர்அறிவிப்புக் கட்டணம்ரூ.100/-
2.பொதுப் பிரிவினர் / ஓபிசி / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS)விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம்ரூ.600/-
3.ஆர்பிஐ பணியாளர்கள்NilNil

 விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in.  மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022.

 வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.

No comments