Breaking News

TNPSC Group 4: குரூப்-4 தேர்வில் பதவி வாரியாக காலி பணியிடங்கள் விபரம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலசந்திரன் நேற்றைய தினம் வெளியிட்டார். அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பதவி வாரியாக காலி பணியிடங்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,

1. கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) - 274,

(Village Administrative officer)

2. இளநிலை உதவியாளர் - 3,681,

( Junior Assistant)

3. பில் கலெக்டர் - 50,

(Bill Collector)

4. தட்டச்சர் - 2,108,

(Typist)

5. சுருக்கெழுத்து தட்டச்சர் - 1,024,

(Steno-Typist)

6. ஸ்டோர் கீப்பர் - 1,

(Store keeper)

வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் - 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments